19 Feb 2019

நியூ ஏஜ் பொயட்ரிஸ்


மனத்தின் அமிலம்
உங்களுக்குப் பிடித்த
பிச்சைக்காரனுக்கே பிச்சையிடுவீர்கள்
உங்களைக் கவர்ந்த
பைத்தியகாரனுக்கே பரிதாபம்‍ கொள்வீர்கள்
உங்களுக்கு அனுகூலமான
சாதிகாரனுக்கே தோள் கொடுப்பீர்கள்
உங்களுக்கு ஒத்தாசையான
பக்கத்து வீட்டுக்காரனுக்கே
பலகாரங்கள் அனுப்புவீர்கள்
உங்களுக்குக் காரியம் ஆகுமென்றால்
குற்றங்களுக்கும் வக்காலத்து வாங்குவீர்கள்
உங்கள் கருத்தின் படி
நாட்டில் எதுவும் நடக்கவில்லை என்கிறீர்களே
நீங்கள் ஆதரிப்பவர்
நாட்டை ஆளவில்லை என்கிறீர்களே
உங்களுக்குப் பிடித்தமான
பிச்சைக்காரர்களும், பைத்தியக்காரர்களும்
நிரம்பிய நாடாக்குவதில்
உங்களுக்குப் பிடித்தமற்றவர்களின்
வாழ்விடங்களைச் சுடுகாடாக்குவதில்
உங்களுக்குதான் எவ்வளவு ஆர்வம்
எதையும் அரிக்கும் அமிலம்
உங்களையும் அரிக்கும் என்பது அறியாமல்
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...