2018 இன் மரணங்கள்
2019 பிறக்கப்
போகும் வேளையில் உலகமே 2018 ஐ திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
2018 மறைய
இருக்கிறது. 2019 பிறக்க இருக்கிறது.
2018 இல்
நிகழ்ந்த மரணங்களைத் திரும்பிப் பார்க்கும் போது நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில்
கலைஞர் கருணாநிதி நம்மை விட்டு மறைந்து விட்டார்.
இந்திய அளவில்
முன்னாள் பிரதமர் வாஜ்பேய் மறைந்து விட்டார்.
உலக அளவில்
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கை இழந்து இருக்கிறோம்.
நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால்
இந்த ஆண்டுதான் இறந்திருக்கிறார்.
சாகித்திய
அகாதமி விருது பெற்ற நம் தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனும் இந்த ஆண்டுதான் மறைந்திருக்கிறார்.
ஐ.நா.பொதுச்
செயலாளராக இருந்த கோபி அன்னான் மறைந்திருக்கிறார்.
பிரபல பத்திரிகையாளர்
குல்தீப் நய்யாரும் மரணித்திருக்கிறார்.
சுராங்கனி
பாடல் மூலம் அறியப்பட்ட சிலோன் மனோகர் இறந்திருக்கிறார்.
துபாயில்
மாரடைப்பால் மரணமடைந்த ஸ்ரீதேவியின் மரணமும் இந்த ஆண்டுதான் நிகழ்ந்தது.
சசிகலாவின்
கணவர் நடராஜன், காஞ்சி மடம் ஜெயேந்திரர் ஆகியோரும் இந்த ஆண்டுதான் மரணமடைந்தனர்.
இவைகள் தவிர
இன்னும் சில மரணங்களையும் ஆறாத் துயரோடு நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது.
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர்,
கேரளாவில்
நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரை அழைத்துச் சென்ற தந்தையின் மாரடைப்பு மரணம்,
நீட் தேர்வு
தோல்வியால் விஷம் குடித்த விழுப்புரம் மாணவி, தற்கொலை செய்து கொண்ட திருச்சி மாணவி,
தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்ட சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் சங்கரன்,
இந்தோனிஷிய
விமானம் கடலில் விழுந்து பலியான 189 பேர்,
எரிமலை வெடித்ததில்
சுனாமி ஏற்பட்டு பலியான ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தோனிஷிய மக்கள்,
ஹெல்மெட்
போடவில்லை என்று துரத்திச் சென்று இன்ஸ்பெக்டர் உதைத்ததில் பைக்கிலிருந்து கீழே விழுந்து
பலியான கர்ப்பிணி,
ஒரு தலைக்
காதலால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட அஸ்வினி,
தமிழகத்தில்
கஜா புயல் பலிகொண்ட 51 பேர் (அரசின் கணக்குப்படி)
என்று நிறைய
மரணங்களை, தற்கொலைகளை, உயிரிழப்புகளை 2018 காட்டியிருக்கிறது.
மரணங்கள்
வாயிலாக ஓர் ஆண்டைப் பின்னோக்கிப் பார்ப்பது என்ன வகைப் பார்வை எனக் கேட்கலாம்.
மரணங்கள்
ஒவ்வொன்றிலும் நாம் கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. கர்ப்பிணி
பலி என்றால் வயிற்றில் இருந்த கருவும் பலியாகியிருக்கிறது என்ற செய்தியும் அதன் உள்ளே
இருக்கிறதுதானே! மரண கணக்குகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அதிகமாகவே இருக்கிறது.
*****
No comments:
Post a Comment