நியாயவாதம்
உங்கள்
கேள்விக்கு
நியாயமான
பதில் வேண்டும் என்பீர்
நன்று
நல்லது
நியாயவான்
நானென்ற முடிவுக்கு
அவசரப்பட்டு
வந்திருக்க வேண்டாம்
பின்வாசல்
வழி கதவைத் தட்டுபவனிடம்
நிபந்தனை
விதிக்காதீர்
மாட்டிக்
கொண்டால்
எல்லார்க்கும்தான்
அசிங்கம்
நியாயவாதிகள்
முன்தான்
நியாயம்
தலைகுனிந்து நிற்கிறது
கள்வனின்
நியாயம் கள்வனுக்கு
காவலனின்
நியாயம் காவலனுக்கு
காவலன்
மாட்டிக் கொண்டதற்கு
கள்வனைக்
குற்றம் சாட்டாதீர்
*****
No comments:
Post a Comment