ஒற்றைக் கோரப் பல்லின் சிரிப்பு
ஒரு
முட்டையைப் பொத்தலிட்டு
ஆளுக்குப்
பாதி
குடித்துக்
கொண்டோம்
வெள்ளைக்
கரு யாருக்குச் சென்றது
மஞ்சள்
கரு யாருக்குச் சென்றது
என்ற
சந்தேகம் இருவர்க்கும்
பொத்தலிட்ட
முட்டை
சிரிக்கும்
கோரப் பல்லைப் போல
வெறித்துப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
*****
No comments:
Post a Comment