சிறிதும் பெரிதும்
எதிலிருந்தும்
பெறுவது
துளிதான்
கடல் தொலைவில்
இருக்கிறது
தொலைவைக்
கடந்தும் இருக்கிறது
புகைபடத்திற்குள்
பிடிபட்டது
எவ்வளவு சிறிய
கடல் என்பதை
நேரில் பார்த்தால்தான்
பிடிபடும்
பெரியதைச்
சிறிதாக்கிப் பார்க்கலாம்
நம் காலை நனைக்கும்
கடல்
கப்பல் மிதக்கும்
கடல்
*****
No comments:
Post a Comment