பிரச்சனைகளின் முடிவுகள்
அச்சம் என்பதை
களைந்து விடு
எல்லா பிரச்சனைகளும்
ஒரு முடிவுக்கு
வந்து விடும்
பயம் உன் பழக்கமாகி
விட்டதால்
தொடர்கின்றன
உனக்கும் எனக்குமான
பிரச்சனைகள்
உன் பயம் ஒரு
நாள் உதிரும் போது
உதிர்ந்து
விட்ட
உன் வாழ்நாள்களை
பொறுக்க முடியாது
என்பதைப்
புரிந்து கொள்வாய்
உனக்கும் எனக்குமான
பிரச்சனை ஒரு
முடிவுக்கு வராமல்
வாழ்க்கை ஒரு
முடிவுக்கு வந்து விடும்
நம் பிரச்சனை
பற்றி பேச
யாரும் இருக்க
மாட்டார்கள்
அவரவர் பிரச்சனை
அவரவர்களுக்கு
*****
No comments:
Post a Comment