எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனின் நாட்குறிப்பிலிருந்து...
ஒரு தமிழ் எழுத்தாளனின் இருப்பு அவனை அளவுக்கதிமாக
புகழ்ந்து தள்ளும் நான்கைந்து பேர்களால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தப் புகழ்ச்சியில்
அதுவரை அவனைக் கண்டுகொள்ளாத நானூறு பேர்களின் புறக்கணிப்பும், இகழ்ச்சியும் மறைந்து
போய் விடுகிறது.
அவன் மறைவுக்குப் பின் ஏழெட்டுப் பேர்கள் மிகையாகப் புகழ்ந்து கவிதை பாடுவார்கள்.
அத்தோடு அவன் ஆன்மா அமைதி கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பிறந்த எழுத்தாளனுக்கு பசி,
பட்டினி, வறுமை ஆகியன விடிமோட்சமாகி அவைகள் அவனுக்கு கபால மோட்சம் வழங்கிய பிறகுதான்
சாஷ்டாங்கமாய் கிடைப்பன கிடைக்கும். அவன் ஆவியாய் அலைந்து திரிந்து அந்தப் பலன்களை
அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான்.
(குறிப்புகள்
அவ்வபோது விட்டு விட்டுத் தொடரும்...)
*****
No comments:
Post a Comment