ஒண்ணுன்னா ஒண்ணு! ரெண்டுண்ணா ரெண்டு!
நாட்டில் புலமைக்கு மதிப்பு இருந்தால்தானே
புலவர்களுக்கு மதிப்பு இருக்கும். புலவர் சமத்து சம்புலிங்கத்தின் பாடு இதனால் திண்டாட்டமாக
இருந்தது.
மன்னராட்சிக் காலத்தில் தப்பும் தவறுமாக,
குற்றமும் பிழையுமாக எழுதி பொழைப்பை ஓட்டி விட்டார். இப்போது மக்களாட்சிக் காலத்தில்
படாத பாடு படுகிறார்.
தலைவர் தண்டபாணி மேல் பிள்ளைத்தமிழ் பாடலாம்
என்றால் "அப்படியென்றால் என்ன?" என்கிறார் தண்டபாணி.
எதிர்க் கட்சித் தலைவர் சின்னமலை மேல்
உலா பாடலாம் என்றால், "அதனால் என்னவாகும்?" என்கிறார் சின்னமலை.
சரிதான் என்ன ஆனாலும் ஆகட்டும் என்று,
ஒரு கட்சி ஆபீஸூக்கு சென்ற சமத்து சம்புலிங்கம் ரெண்டு வாழ்த்துப் பாக்களைப் பாடிக்
கொடுத்தார்.
"எதுக்கு ரெண்டு வாழ்த்துப் பாக்களைக்
கொடுக்கிறீர்கள்?" கட்சி ஆபீஸில் இருந்தவர்கள் கேட்டனர்.
"கட்சியில் ஒரு கோஷ்டி இருந்திருந்தால்
ஒன்று கொடுத்திருப்பேன். ரெண்டு கோஷ்டி இருப்பதால் ரெண்டு கொடுக்கிறேன்." என்றார்
சம்புலிங்கம்.
"எதாவது ஒரு கோஷ்டிக்கு மட்டும்
கொடுங்க!" என்றனர் அங்கிருந்தவர்கள்.
"ரெண்டு கோஷ்டியில எந்த கோஷ்டி
ஆட்சிக்கு வரும்னு எனக்கென்ன தெரியும்? அதனால ரெண்டு கோஷ்டிக்கும் இருக்கட்டும்!"
என்று கூறிய சம்புலிங்கத்திற்கு ரெண்டு கோஷ்டியும் பாரபட்சம் பார்க்காமல் தலைமுறைகள்
போற்றும், காலத்துக்கும் மறக்காத பரிசிலாக தர்ம அடிகளைக் கொடுத்து அனுப்பினர்.
*****
No comments:
Post a Comment