ஜீரோ எம்.பி.யும் சுகரும்
"சுகர் லெவல் கம்மி பண்ண ஒரு வழி
சொல்லுங்க!" என்றவரிடம், "மொபைல்ல பார்க்குற எம்.பி. லெவல்ல கம்மி பண்ணுங்க!"
என்றார் டாக்டர்.
*****
யாவரும் நட்பே!
எந்தக் கட்சியும் பகைத்துக் கொள்ள தயாரில்லை
எல்லா கட்சிக் கூட்டத்துக்கும் ஆட்கள் சப்ளை செய்யும் பரமசிவத்தை.
*****
செயல்
கொளுத்தும் வெயிலை எதுவும் சொல்ல முடியாத
பேருந்து பயணிகள் பேருந்தை எடுக்காத ஓட்டுநரைத் திட்டித் தீர்த்தனர்.
*****
No comments:
Post a Comment