விலக்கப்பட்ட கனி
திரும்பத் திரும்ப
சொல்லிக் கொடுத்தார்கள்
நான்
திரும்பத் திரும்ப
மறந்து போனேன்.
பொறுத்துப் பொறுத்துப்
பார்த்து
இறுதியாக என்னை
வெளியேறச் சொன்னார்கள்.
நான் வெளியேறிய பின்
அவர்கள்
திரும்பத் திரும்ப
சொல்லிக் கொடுத்த
ஒவ்வொன்றும்
அட்சரம் பிசகாமல்
அப்படியே நினைவுக்கு
வர,
அங்கே
ஒவ்வொரு முறையும்
என்னை
திரும்பத் திரும்ப
மறைத்தது எது என்பதை
மீண்டும் மீண்டும்
அவர்களிடம் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்.
அவர்களோ என்னை
விலக்கப்பட்ட கனியாய்த்
திட்டித் தீர்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment