மிக்சர்
தலைவர்
"எதற்கெடுத்தாலும் போராடுறாங்க!" என்று சலித்துக்
கொண்டார் நியூஸ் சேனலைப் பார்த்துக் கொண்டு மிக்சர் தின்று கொண்டிருந்த தலைவர்.
*****
எங்கப்பன்
குதிரில இல்ல!
"எதைப் பலி கொடுப்பது?" என்று மேலிடம் யோசித்துக்
கொண்டிருக்க, "ஒரு தேசம் நல்லா இருக்க ஒரு மாநிலத்தைப் பலி கொடுப்பது தவறில்லை!"
என்று பேசிக் கொண்டிருந்தார் தமிழ்நாட்டுத் தலைவர்.
*****
கடைசி யோகி
காட்டை அழித்துப் பிரமாண்ட சிலையாய் அவதரித்தார்
கடைசி யோகி.
*****
No comments:
Post a Comment