மனசாந்தி
இருக்கின்ற காசுக்கு
பேய் நடமாட்டம் இருப்பதாகச்
சொல்லும் வீட்டை
துணிந்து வாங்குவதைத்
தவிர
வேறு வழி தெரியாத போது
மனம் சாந்தி கொள்கிறது,
மாதம் பிறந்தால்
ஊழியம் கொடுத்து
வாட்ச் மேன் போட முடியாத
வீட்டுக்குக்
காவலாய் இருந்து விட்டுப்
போகட்டும்
பேய்கள் என்று!
*****
புரிதல்
நூற்றுக்கு ஒரே ஒரு மதிப்பெண்
குறைந்த போது
அலட்சியம் என்று சொன்னார்கள்
ஸ்ட்ரெஸ் என்று புரியாத
அப்பாவும், அம்மாவும்.
*****
No comments:
Post a Comment