அலாவுதீன் பூதம்
"ஆலம்பனா!" என்று
பணிந்து நின்ற அலாவுதீன் பூதத்திடம் ரெண்டாயிரம் நோட்டைக் கொடுத்த சில்லரை மாத்தி
வரச் சொன்னான் சம்சுதீன்.
*****
பெருமிதம்
முதல் முறையாக வரிசையில் நின்ற
பெருங்கூட்டத்தைப் பார்த்து பெருமிதமாக உணர்ந்தார் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஏ.டி.எம்.
காவலாளி கண்ணப்பன்.
*****
பிட்டுக்குப் பதில் 2000
பிட்டுக்கு மண் சுமக்கச் சம்மதித்த
சிவபெருமான், "அதெல்லாம் முடியாது! ரெண்டாயிரம் நோட்டுதான் தர முடியும்!"
என்று பாட்டிச் சொன்னதைக் கேட்டு மாயமானார்.
*****
No comments:
Post a Comment