ஏ.டி.எம்.முன் கொட்டிக் கிடக்கும்
வாய்ப்புகள்
சமத்து
சம்புலிங்கம் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். முன் நின்று கொண்டிருந்தார். நின்று கொண்டிருந்தார்
என்றால், நெடுநேரம் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பணம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை
போய் விட்டது.
அப்போதுதான்
அவரின் நினைவுக்கு யாரோ ஒருவர் சொல்லிய ஒரு வாசகம் நினைவுக்கு வந்தது, "தோல்வியாளன்
ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒரு பிரச்சனையைப் பார்க்கிறான். வெற்றியாளன் ஒவ்வொரு பிரச்சனையிலும்
ஒரு வாய்ப்பினைப் பார்க்கிறான்!"
உடனடியாக ஏ.டி.எம்.
வாயில் முன் ஒரு பஜ்ஜி கடையை ஆரம்பித்தார் சம்புலிங்கம்.
ஏ.டி.எம்.லிருந்து எடுக்க
வேண்டிய பணத்தை விட அதிக பணத்தை ஈட்டி விட்டார் சம்புலிங்கம்.
*****
No comments:
Post a Comment