வழி
"லைசென்ஸ், இன்ஷ்யூரன்ஸ்,
ஹெல்மெட் எதுவும் இல்ல! இதுல குடிச்சிட்டு வேற
போனா எப்படியும் போலீஸ் பிடிக்கும்!" என்ன செய்வதென்று
யோசித்த குமார் டாஸ்மாக்கை மூடச் சொல்லிப் போராட்டம் நடக்கும் தேரடி வீதி வழியாகத்
திருப்பினான் டூவீலரை!
*****
சால்ட் அண்ட் பெப்பர்
அஜித் மாதிரி கணவன் வேண்டும் என்று காத்திருந்த ராதிகாவுக்கு பதினொரு
வருடங்களுக்குப் பிறகு அவள் எதிர்பார்த்த மாதிரியே கணவனாக வந்தான் தேவானந்த் சால்ட்
அண்ட் பெப்பர் லுக்கில்!
*****
கொலை
"சார்! பக்கத்து ப்ளாட்டுல தூக்குப்
போட்டு தற்கொலை பண்ணிகிட்டாங்க!" என்று கூச்சல் போட்டவரிடம்,
"போலீஸ்க்குப் போன் பண்ணுங்க!" என்றார்
அதைக் கேட்டவர். "தற்கொலை பண்ணிகிட்டதே அங்க குடியிருந்த
போலீஸ்காரர்தான் சார்!" என்றார் கூச்சல் போட்டவர்!
*****
No comments:
Post a Comment