வாழ்க்கை என்றால் நான்கு விதமாகத்தான் இருக்கும்!
வாழ்க்கையைப்
பற்றிப் பேசும் போது, நான்கு பேர் நான்கு விதமாகத்தான் சொல்வார்கள் என்பார்கள்.
கடைசியில்
நான்கு பேராவது வேண்டும் என்பார்கள். தூக்கிக் கொண்டுப் போய்ப் போட வேண்டுமே அதற்காக.
அதற்காகவே நான்கு பேருக்காவது நல்லவராக இருக்க வேண்டும் என்பார்கள்.
வாழ்க்கையைப்
பற்றி நன்கு அறிந்தவர்களை நான்கும் தெரிந்தவர்கள் என்பார்கள்.
திசைகள்
கூட நான்குதான்.
இந்த
நான்கு திசைகளில் எந்தத் திசையில் வேண்டுமானாலும் போகலாம்.
வாழ்க்கை
கூட இப்படி நான்கு விதமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப
முடிகிறதா?
ஆமாம்
தோழமைகளே!
வாழ்க்கை
நான்கு விதமாகப் போய்க் கொண்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
முதலாவதாகத்
தெரிந்ததிலிருந்து தெரிந்ததற்கே போய்க் கொண்டிருப்பது.
இரண்டாவதாகத்
தெரிந்ததலிருந்து தெரியாததற்குப் போய்க் கொண்டிருப்பது.
மூன்றாவதாகத்
தெரியாததிலிருந்து தெரிந்ததற்குப் போய்க் கொண்டிருப்பது.
நான்காவதாக
தெரியாததிலிருந்து தெரியாததற்கேப் போய்க் கொண்டிருப்பது.
இதில்
உங்கள் வாழ்க்கை எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது குறித்துச் சொல்வதற்கு
என்னிடம் சில விடயங்கள் இருக்கின்றன.
யாரும்
சொன்னால் அது குறித்துச் சொல்லலாம் என்று இருக்கிறேன்.
****
No comments:
Post a Comment