4 Dec 2021

மீண்டும் காதலியைக் கண்டவன்

மீண்டும் காதலியைக் கண்டவன்

இன்னொருவனுடன் சல்லாபிக்கும் காதலியைப் பார்த்த பின்

காதலின் நம்பிக்கையை இழந்தவன்

நெடுநாட்கள் அலைந்து திரிந்தான்

ஆணும் பெண்ணுமாய் அலைபவர்களை

அற்பமாய்ப் பார்த்து பைத்தியம் போல் சிரித்தான்

புணரும் நாய்களைப் பூனைகளைக் கண்டால்

வெறிகொண்டு அடிக்கத் துவங்கினான்

உலகம் தனித்திருக்க கடவது எனச் சபித்தான்

நிலை திரிந்து அலைந்தவனை இழுத்து வந்து

ஒரு பெண்ணைப் பார்த்து மணம் புரிந்து வைத்ததை

எந்த வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்டான்

ஒரு நொடியில் திருந்திய உலகைப் போல

மாறிப் போனவனின் உலகில் அதிசயங்கள் முளைத்தன

குடும்பஸ்தன் நியாயஸ்தன் பெரியஸ்தன் ஆகி

அலுவல் பணியின் அழுத்தத்தின் ஒரு நாள்

இன்னொருத்தியுடன் சல்லாபித்த போது

முன்பொரு நாள் எதேச்சையாக

இன்னொருவனுடன் சல்லாபித்த காதலியைக் கண்டான்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...