6 Dec 2021

கனவுத் துறையின் காதல் விளக்கம்

கனவுத் துறையின் காதல் விளக்கம்

இந்த இரவு பிடித்திருந்தால்

கனவில் மட்டும் வா

ஏழு கடல் ஏழு மலை

எட்டு காடு எண்பது பள்ளதாக்கு

கொடும் மிருகம் கடும் மழை

உறைய வைக்கும் பனி கொளுத்தும் வெயில்

ஆறலைக் கள்வர்கள் நிறைந்த பாலை

தடுத்து நிறுத்தும் சடங்குகள்

கட்டிப் போடும் சம்பிரதாயங்கள்

சாதித் தலைவர் ஊர் நாட்டாமை

ஆணவக் கொலை புரிய அஞ்சாத உறவுகள்

குலப்பெருமையின் வீச்சமடிக்கும் இளவட்டங்கள்

ஊளையிடும் நாய்கள் இரவுக் காவல் புரியும் கூர்க்கா

எதையும் பொருட்படுத்தாத கனவு பிடித்திருக்கிறது

நாம் காதல் செய்வதும் களவு புரிவதும்

வண்ணத்துப் பூச்சிக்கும் தெரியலாகாது

தூது செல்லும் மின்னஞ்சலிலும் வாட்ஸ் ஆப்பிலும்

தகவல்கள் தந்திரமாய் உருவப்படுகின்றன

நம்மிருவர் கனவுகளை நாமிருவரும்

பத்திரமாய் வைத்திருக்கும் வரையில்

கனவுகளிலாவது காதலிக்க நாமிருப்போம்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...