5 Dec 2021

ஆதி மரபின் பின்தொடரும் அச்சம்

ஆதி மரபின் பின்தொடரும் அச்சம்

மனிதர்கள்தாம்

காட்டு விலங்குகள் அல்ல

அதிகாரங்களைக் காட்டி பயமுறுத்துவார்கள்

கூட்டம் சேர்த்து வைத்திருக்கும்

ஆட்களை முன்னிருத்தி மிரட்டுவார்கள்

ஆதியில் பரவிய

காட்டு வாழ்வின் அச்சம் பின்தொடரும் போது

அடிமைக் குகையில் அவ்வபோது ஒளிந்து கொள்ள வேண்டும்

வெறி பிடித்த மனிதர்களின் கண்ணில் படும் போது

மருண்டோடும் மானின் வேகத்தில் ஓட வேண்டும்

கொடிய காட்டு மிருகங்களைப் போலத் துரத்துபவர்கள்

மனதின் நம்பிக்கையை ருசித்துத் தின்னக் கூடியவர்கள்

சிங்கமும் புலியுமாய் உருமிக் கொண்டிருப்பவர்கள்

மனித வேட்டையாடித் தின்ன உரிமம் பெற்றவர்கள்

முயலும் மானுமாய்ப் பழக்கப்பட்டவர்கள்

ஒளிந்தோடி வாழ அனுமதிக்கப்பட்டவர்கள்

பிராய்லர் கோழிகளும் வளர்ப்பு ஆடுகளுமாய்

கணக்கில் கொள்ளப்படுபவர்கள்

எப்போது வேண்டுமானாலும் துண்டாடப்படுபவர்கள்

ஆதி மரபின் காட்டு வாழ்வின் மிருக அச்சம்

நாகரிக தொட்டிலில் மனித வடிவில் பின் தொடரும் நிழலைப் போல

******

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...