31 Dec 2021

முளை விடா விதைகள்

முளை விடா விதைகள்

விதைகளை விழுங்கினால்

வயிற்றுக்குள் முளைக்கும் என்கிறார்கள்

எவ்வளவோ விதைகளை விழுங்கியாயிற்று

வயிற்றில் முளைத்ததெல்லாம் பசி

விழுங்கிய ஒரு விதையாவது

வயிற்றுக்குள் மரமாகி இருந்தால்

பசிக்கும் போதெல்லாம் பழம் தந்திருக்கும்

மலட்டு விதைகளைக் கண்டுபிடிப்பதை விட்டு விட்டு

வயிற்றுக்குள் முளை விடும் விதைகளை

இனியாவது கண்டுபிடிக்க வேண்டும்

வயிறாரச் சோறிட வேண்டும் என்ற நெருக்கடி

யாருக்கும் இருக்க வேண்டாம்

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...