28 Dec 2021

ஒவ்வொரு நாளும் வளர்ந்த மரம்

ஒவ்வொரு நாளும் வளர்ந்த மரம்

இன்னொருவருக்குக் கிட்டும் அமைதி

உங்களுக்குக் கிட்டாமல் போகலாம்

நீங்கள் நினைக்கலாம்

மன அமைதி என்பது வஞ்சகமானது என்று

அது உங்கள் எண்ணங்களை வைத்து

உங்களை வாட்டக் கூடியது

நீங்கள் உருவாக்கிய உலகில் வைத்து

உங்களைச் சிறைபிடிக்கக் கூடியது

என்றோ ஒரு நாள் விதைத்த விதை

இன்று மரமாகியிருக்கிறது

ஒவ்வொரு நாளும் வளர்ந்த மரத்தை

நீங்கள் கவனிக்க தவறி விட்டீர்கள்

கொழுந்து விட்டெரிந்த பேராசையோ

அதன் புகைச்சலில் எழுந்த பொறாமையோ

உங்கள் கண்களை மறைத்திருக்கும்

எது எப்படி இருந்தாலும்

உங்கள் தேவை உங்களுக்குத் தெரிந்தே இருந்திருக்கும்

உங்கள் நிலையும் இருப்பும்

நீங்கள் அறிந்ததாகவே இருந்திருக்கும்

சரியானது எதுவென்பதும்

உங்கள் உணர்வில் தோன்றியிருக்கும்

எல்லாவற்றையும் நிராகரித்து

உங்கள் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம்

உங்களுக்கான சொகுசு மட்டுமே என்பதால்

இப்போது நீங்கள் தேடும் அமைதி

உங்கள் கண்களுக்குத் தட்டுபடாமல் போகிறது

இப்போதும் நீங்கள் கண்டடையலாம் என்றால்

உங்கள் பார்வையை மறைப்பவைகளை

நீங்கள்தான் தகர்த்தெறிய வேண்டும்

உங்கள் அமைதியை நீங்கள்தான் மூடியிருக்கிறீர்கள்

*****

No comments:

Post a Comment

அப்பாவின் பரிவு! (சிறுகதை) - விகடபாரதி

அப்பாவின் பரிவு! (சிறுகதை) -          விகடபாரதி நாமஞ்சேரிப் பண்ணையப் போயிப் பாத்துட்டு வந்தா தேவலாம்ப்பா என்றார் அப்பா. இத்தோடு பத்தாவ...