தீராத தாகத்தைச் சுமந்து திரிபவர்கள்
அசுத்தப்படுத்திய நீர் ஓடுவதற்காக
முன்னோர்கள் வெட்டிய கால்வாய்கள்
பயன்படுகின்றன
தண்ணீர் வராத ஆற்றை
ஏக்கமுடன் பார்த்துக் கொண்டிருக்க
ஆற்றில் ஓடும் நீரை
குத்தகைக்கு விடும் காலம்
வந்து சேரவில்லை
விட்டேத்தியாய்ப் பார்த்துக்
கொண்டிருக்க
பெய்யும் மழையை
ஒட்டுமொத்தமாய்ச் சேமித்து
வைக்க முடியவில்லை
தெருவெங்கும் இருந்த தண்ணீர்ப்
பந்தல்கள்
பெட்டிக்கடைகளாய் மாறி
தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு
வந்து விட்டன
இப்போதும் நம்பத்தான் முடியவில்லை
ஒவ்வொருவரின் தாகத்திற்கும்
ஒரு விலை இருக்கிறது
பணமற்றவர்கள் தீராத தாகத்தைச்
சுமந்து திரிவார்களாக
*****
No comments:
Post a Comment