26 Dec 2021

அசையாத மனிதர்களைத் தாங்கும் நாற்காலிகள்

அசையாத மனிதர்களைத் தாங்கும் நாற்காலிகள்

முதலில் ஒரு மணி நேர அனுமதி கேட்கப்பட்டது

இரண்டு மணி நேரம் கடந்த போது

அது அரை நாள் விடுமுறையாகக் கோரப்பட்டது

இதே போல் பிற்பகலில் ஒரு மணி நேர அனுமதி கேட்கப்பட்டு

இரண்டு மணி நேரம் கடந்த பிற்பாடு

அது ஒரு நாள் விடுமுறையாக மாற்றப்பட்டது

கொஞ்சம் நெகிழ்ந்திருந்தால் சலுகையில் எல்லாம் நகர்ந்திருக்கும்

நெருக்கிப் பிடிக்கும் போது வேறு வழியின்றி

ஒழுங்கிற்குள் வர நினைக்கிறார்கள்

ஏமாற்றுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும்

செய்து பார்க்க நினைப்பவர்கள்

கதையாகாது என்று தெரிந்த பிறகே

சட்டதிட்டங்களுக்குள் வர நினைக்கிறார்கள்

வேலை செய்யாமலிருப்பதற்கு மூளையைப் பிரயோகிப்பவர்கள்

வேலை நாட்களை விடுமுறை நாட்களாக்கி

வார்த்தைகளை வெகு வஞ்சனையாக வீசுகிறார்கள்

வார்த்தைகளுக்கு மயங்குபவர்கள்

காரியங்கள் தொலைத்து போக

தேய்ந்து போய்க் கிடக்கும் நாற்காலிகளில்

பிட்டங்களின் சுவடுகளைக் காண்கிறார்கள்

காலம் காலமாய் அசைந்து கொடுக்காத

மனிதர்களைச் சுமந்த நாற்காலிகள்

களைத்துப் போய் கிடக்கின்றன

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...