30 Nov 2021

சுவரை நனைக்கும் குருதி

சுவரை நனைக்கும் குருதி

எழுத்துகள் குற்ற உணர்வைத் தருகின்றன

இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைக் குறை கூறுகின்றன

எப்படி வாழ வேண்டும் என வரையறுக்கின்றன

நடைமுறை முரண்பாடுகள் எழுத்துகளுக்குத் தெரிவதில்லை

எழுத்துகள் பிறந்த பிறகு

நடைமுறையினின்றுப் பிறந்ததை எழுத்துகள் மறந்து விடுகின்றன

உணர்ச்சிவசப்படுத்தினால் போதும் என்று நினைக்கின்றன

வியப்பின் உச்சத்தில் நிறுத்துவது போதும் என்று கருதுகின்றன

மனித வியாபாரத்தின் மலினப் பொருளாவதைப் பற்றி

எழுத்துகள் அக்கறை காட்டுவதில்லை

பிழைத்திருப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும்

செய்து கொள்ளும் எழுத்துகள்

வாசிப்போருக்கு அச்சாத்தியம் கூடாதென்கின்றன

உறைந்து விட்ட ஒரு பொழுதைத்

தவறாகப் பிரதியெடுக்கும் எழுத்துகள்

பதிவாகி விட்ட காரணத்தைச் சொல்லி

நகலை அசலென்றும் அசலை போலியென்றும்

அதிகார மிரட்டல் செய்கின்றன

எழுத்துகளை எழுத்துகளால் எதிர்கொள்கையில்

வரலாற்றுச் சுவரை மனித குருதி நனைக்கிறது

இனிமேலாவது உண்மையை எழுதுங்கள் என்று எழுதப்படுவது

பூட்ஸ் கால்களின் அடியில் மிதிபடுகிறது

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...