மீண்டும் மறுபடியும் புதிய இஸ கவிதைகள்
நேற்று எழுதியிருந்து புதிய இஸ கவிதைகள் அநேகருக்குப் பிடித்துப்
போனது போன ஜென்மத்தில் நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். இது போன்ற அநேகக் கவிதைகளை
எழுதித் தள்ள வேண்டுமென்று பலர் விரும்புகிறார்கள். இந்தப் புதிய இஸ கவிதைகள் புதுக்கவிதை
எழுதுவதை விட சுலபமானது. போகிற போக்கில் எழுதித் தள்ளி விடலாம். இதனால் நிறைய பேர்
இந்த புதிய இஸ கவிதைப் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அனைவரும் புதிய
இஸ கவிதைகளை எழுத வேண்டும் என்று என்பதுதான் எனது விருப்பமும். இதற்கான இலக்கணம் என்னவென்று
கேட்டு விடாதீர்கள். அப்படி எதுவும் இல்லாததுதான் இதன் இலக்கணம். இதற்கென இலக்கணம்
எழுதி இக்கவிதைகளை எழுதுபவர்கள் குறைந்து விடக் கூடாது பாருங்கள். சான்றாகக் குழந்தைகளுக்கான
பாடல் வடிவிலும் புதிய இஸ கவிதைகளை எழுதலாம். அப்படி ஒரு புதிய இஸ கவிதை.
எம்.எல்.ஏ.வாம்
எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ.வாம் எம்.எல்.ஏ.
நம்ம தொகுதி எம்.எல்.ஏ.
வயிறு முட்ட தின்னவே
பிரியாணி வாங்கித் தந்தார்
தவிக்குது வாய் என்றதும்
குவார்ட்டர் வாங்கித் தந்தார்
ஓட்டுப் போட சொன்னார்
கேட்ட காசு தந்தார்
ஓட்டுப் போட்டு முடிந்ததும்
ஓடிப் போய் விட்டார்
அடுத்த தேர்தல் வந்தால்
அன்பாய் ஓடி வருவார்
கேட்டதெல்லாம் தருவார்
வாக்குறுதி கொடுப்பார்
வாக்குப்பதிவு முடிந்தால்
வந்தப் பாதை மறப்பார்
*****
கொஞ்சம் அதி தீவிரமாகத் தத்துவார்த்தமாகவும் புரியாதடிபயும் எழுதலாம். அப்படியொரு
கவிதை கீழே உள்ளது. ஆக நீங்கள் எந்தத் திசையிலிருந்தும் புதிய இஸ கவிதைகளை எழுதத் தொடங்கலாம்.
புதிய இஸ கவிதைகளை எழுதுபவர்கள் இதை யார் பிரசுரிப்பார்கள் என்று கவலைப்பட வேண்டாம்.
இந்த வலைப்பூவில் பிரசுரிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் பாட்டுக்கு எழுதித் தள்ளி
அனுப்பிக் கொண்டிருங்கள். மற்றதை வலைப்பூவில் பார்த்துக் கொள்வோம்.
காலிக்குண்டான்
குண்டான் சோற்றைத்
தின்று முடித்து
வைத்திருந்தான் காலிக்குண்டானை
என்னடா இது என்றால்
காலிக்குண்டானைத் தின்னடா என்கிறான்
*****
இதைப் படித்ததும் இது போன்ற புதிய இஸ கவிதைகளை நிறைய எழுத முடியும் என்ற நம்பிக்கை
உங்களுக்கு வந்திருந்தால் அதற்கு ஆயிரம் நமஸ்காரங்கள். இறைவன் உங்கள் கையைப் பிடித்து
எழுத உங்களுக்கு அருள் புரிவாராக!
*****
No comments:
Post a Comment