மேக பயணம்
கருமேகத்தை வெளுத்தது
போன்ற
வெள்ளை வானமாய்
வேட்டியும் சட்டையும்
அணிந்து
முறுக்கோடு செல்லுமவன்
டாஸ்மாக் பாரில்
யார்யார்க்கோ வள்ளல்
போல்
வாரி வழங்குகிறான்
முற்றும் பையிலிருந்த
கடைசிச் சொட்டுக் காசும்
இலையிலிருந்து விழுந்த
மழைத்துளி போல
காலியான பின்
அங்கும் இங்கும் கெஞ்சி
ஒரு குவார்ட்டரைப் போட்டு
விட்டு
வெள்ளை வானைச் சூழ்ந்து
கொண்ட
கருமேகமாய்
தெருவெல்லாம் புரண்டு
அழுக்குப் பீடித்த வேட்டியோடும்
சட்டையோடும்
அலங்கோலமாக வீடு திரும்புகிறான்
குடித்த சரக்கையெல்லாம்
அக்கருமேகம் போல்
கண்ட இடமெல்லாம் வாந்தியெடுக்க.
*****
No comments:
Post a Comment