காரணம்
வாங்கிக் கொடுத்த செல்போனை வேண்டாமென்று
மறுத்து அதற்கு அப்பா சொன்ன காரணம், "அப்புறம் போன்லேயே பேசிகிட்டு, நேர்ல பார்க்க
வர மாட்டீங்கடா!"
*****
வாக்குமூலம்
ஓட்டுக் கேட்க வந்த வேட்பாளரிடம் எழுதி
வாங்கிக் கொண்டனர் வாக்காளர்கள், "சட்டசபைக்குப் போறதுக்கு முன்னாடி ரிசார்ட்டுக்குப்
போகக் கூடாது!"
*****
அர்ச்சனை
"தொகுதிக்கு வந்திருந்தா கூட இவ்வளவு
திட்டியிருக்க மாட்டாங்க போலிருக்கு!" என்று சலித்துக் கொண்டார் வாட்ஸ் அப்பிற்கு
வந்த தலைவர்.
*****
No comments:
Post a Comment