30 Jan 2017

பத்திரமாய் இருக்கும் சாவி


த்திரமாய் இருக்கும் சாவி
ஒரு கோப்பை மதுவில்
உன் நினைவுகளைப்
புதைத்து வைத்திருக்கிறேன்!
கோப்பைத் திறக்கும்
சாவியைப் பூட்டிய பின்
உன்னிடமே
ஒரு பொழுதில்
தூக்கி எறிந்து விட்டேன்!
எந்தப் பூட்டின் சாவி
என்று தெரியாமல்
நீயும்
அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய்,
எந்தப் பூட்டையும்
திறந்து பார்க்கும்
முயற்சியைச் செய்யாமலே!
*****
ஒரு முத்தம்
காற்று நிற்கும் பொழுதில்
சூரியச் சுடர் அணையும் பொழுதில்
சுற்றும் பூமி
சுழற்சி மறக்கும் பொழுதில்
ஒரு முத்தம் தா!
காற்றாய் வீசுவேன்
உனக்கு மட்டும்
சூரியச்சுடராய் ஒளிர்வேன்
உன் கண்களுக்கு மட்டும்
பூமியாய்ச் சுற்றுவேன்
உன்னை மட்டும்
நான்!
*****

2 comments:

  1. பத்திரமாய் இருக்கும் சாவி... கொஞ்சம் கவிதையும் நிரம்ப காதலும்...

    ReplyDelete
  2. ஒரு முத்தம்...
    சுற்றும் முற்றும் காதல்...

    ReplyDelete

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...