16 Sept 2022

நம்பிக்கை இழக்காதீர்கள்

நம்பிக்கை இழக்காதீர்கள்

இன்று போய் நாளை வா

சோறும் குழம்பும் எதுவும்

மீதமாகவில்லை

பிச்சைக்காரரே

இன்று போய் நாளை வாருங்கள்

நாளை ஒரு வேளை மீதமாகா விட்டால்

வருத்தம் கொள்ளாமல்

நாளை மறுநாள் வாருங்கள்

நாளை மறுநாள் மீதமாகா விட்டால்

நீங்கள் நினைப்பது சரியே

அப்படியே அதற்கடுத்த நாள் வாருங்கள்

என்றாவது ஒரு நாள்

மீதமாகாமலா போய் விடும்

உங்களுக்காக ஒரு நாள் மீதமாகட்டும்

ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்

நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்

நல்லதே நடக்கும்

நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும்

நம் வீட்டுக்கு வந்து செல்லுங்கள்

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...