ஒரே கேள்வி ஒவ்வொருவருக்கும் வேறு பதில்
எப்படி
வாழ்வது
யாருக்கு
என்ன பதில் சொல்ல முடியும்
ஒரு
பிச்சைக்காரருக்குச் சொல்லும் பதில்
பணக்காரருக்குப்
பொருந்தாது
பணக்காரருக்குச்
சொல்லும் பதில்
ஏழைக்குப்
பொருந்தாது
புத்திசாலிக்குச்
சொல்லும் பதில்
முட்டாளுக்குப்
பொருந்தாது
முட்டாளுக்குச்
சொல்லும் பதில்
அரைவேக்காடுகளுக்குப்
பொருந்தாது
அரைவேக்காடுகளுக்குச்
சொல்லும் பதில்
ஞானிகளுக்குப்
பொருந்தாது
ஞானிகளுக்குச்
சொல்லும் பதில்
குடும்பஸ்தர்களுக்குப்
பொருந்தாது
குடும்பஸ்தர்களுக்குச்
சொல்லும் பதில்
சூதாடிகளுக்குப்
பொருந்தாது
சூதாடிகளுக்குச்
சொல்லும் பதில்
சிக்கனவாதிகளுக்குப்
பொருந்தாது
சிக்கனவாதிகளுக்குச்
சொல்லும் பதில்
கருமிகளுக்குப்
பொருந்தாது
கருமிகளுக்குச்
சொல்லும் பதில்
வள்ளல்களுக்குப்
பொருந்தாது
வள்ளல்களுக்குச்
சொல்லும் பதில்
உலோபிகளுக்குப்
பொருந்தாது
உலோபிகளுக்குச்
சொல்லும் பதில்
தாராள
மனமுடையவருக்குப் பொருந்தாது
தாராள
மனமுடையவருக்குச் சொல்லும் பதில்
குறுகிய
மனமுடையோருக்குப் பொருந்தாது
குறுகிய
மனமுடையோருக்குச் சொல்லும் பதில்
குழந்தைகளுக்குப்
பொருந்தாது
குழந்தைகளுக்குச்
சொல்லும் பதில்
அதே
குழந்தை பெரியவராகி விட்டால் பொருந்தாது
எப்படி
வாழ்வது என்று
யாருக்குச்
சொல்லும் பதில் யாருக்குத்தான் பொருந்தும்
அவரவர்
வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து
எப்படி
வாழ்வது என்பது
அவரவர்
முடிவு செய்து கொள்வதே பொருத்தம்
ஒற்றைப்
பதில் சொன்னால்
அதில்
உண்டாகும் அத்தனை திருத்தம்
*****
அருமை
ReplyDelete