13 Jun 2025

நடப்பின் கலை!

நடப்பின் கலை!

துவக்கி வைக்கும்

முடித்து வைக்காது

தத்துவம் பேசுவது நல்லது

பேசிக் கொண்டே இருப்பது

வாழ்க்கைக்கு உதவாது

எதற்கும் உதவாது

மெனக்கெடல் இல்லாமல் எதுவும் ஆகாது

கஷ்டம் முக்கியம்

நிரம்ப கஷ்டம் சில நேரங்களில்

ரொம்ப ரொம்ப முக்கியம்

புரிந்து கொள்வதற்கு எளிய வழி

செய்து பார்

நினைத்த பிறகு காலம் தாழ்த்தாதே

செய்ய முடியாமல் போனது போகட்டும்

இப்போது ஆவது என்னவோ ஆவட்டும்

கலந்து இருப்பதும் கலந்து கிடப்பதும் வாழ்க்கை

மகிழ்ச்சியோடு கவலை

சுத்தத்தோடு சிலந்தி வலை

லாபத்தோடு நஷ்டம்

இனிமையோடு கஷ்டம்

வெற்றியோடு தோல்வி

நிராயுதபாணியோடு கருவி

அலுப்போடு சுறுசுறுப்பு

மந்தத்தோடு கிறுகிறுப்பு

பிடித்ததைச் செய்து பிடிவாதம் இல்லாமலிரு

வேண்டியதைப் பெற்றுத் தர வர வேண்டியவர்கள் வருவார்கள்

உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் விரைவில் நடக்கும்

துரதிர்ஷ்டம் என்றால் காலம் தாழ்த்தி நடக்கும்

*****

No comments:

Post a Comment