நோயும் வாழ்க்கையும்
நோயோடு
மனிதன் வாழ முடியாது. அதற்காக நோயைப் போக்குகிற முயற்சியில் தலைவலி போய் திருகுவலி
வந்து விடக் கூடாது.
இன்றைய
சூழலில் மருத்துவமும் மருந்தும் நோயை விட அச்சுறுத்தலாக உள்ளன. மருந்துகளோடும் மருத்துவத்தோடும்
போராடுவதை விட நோயோடு போராடுவது அல்லது அந்நோயை ஏற்றுக் கொள்வதே மேலானதாகத் தோன்றுகிறது.
பெரும்பாலான
நோய்கள் மருந்துகளுக்கான நோய்களாக இல்லை. வாழ்க்கை முறையால் வாங்கி வந்த நோய்களாக உள்ளன.
வாழ்க்கை
முறை பழகிய ஒன்றாக உள்ளது. சில பல சூழ்நிலைகளில் அப்படித்தான் வாழ வேண்டும் என்கிற
நெருக்கடியை உருவாக்குவதாகவும் உள்ளது.
மனிதன்
புத்திசாலித்தனமாகச் சிந்தித்து அதிலிருந்து தப்பி வர வேண்டியதாக இருக்கிறது. தப்பி
வந்து சிறிது காலம் சிரமப்பட்டு பழக்க வழக்கங்களைச் சரியானபடி மாற்றிக் கொள்ள வேண்டியதாக
இருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப்
பார்த்தால் மருந்து தேவைப்படும் நோய்கள் குறைவே. வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றமே
பல நோய்களையும் அதற்கான மருந்துகளையும் குறைத்து விடும். இதில் தயக்கமோ, பயமோ ஏற்பட்டால்
மருந்துகளையே உணவாக ஆக்கிக் கொண்டு விடும் ஒரு வாழ்க்கை முறையை வாழ நேரிடும்.
உணவை
உண்டதும் தாம்பூலம் தரித்துக் கொள்வதைப் போல மருந்துகளைத் தரித்துக் கொள்வதோ, வெற்றிலைச்
செல்லத்தைப் போல மாத்திரைச் செல்லத்தை எடுத்துக் கொண்டு போவதோ நாம் தேர்ந்தெடுக்கும்
வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது.
*****
No comments:
Post a Comment