18 Apr 2025

ஆயுள் பேறு

ஆயுள் பேறு

எட்டாம் இடத்தில்

இருப்பது என்னவோ

பட்டாம் பூச்சியினும்

ஈசல்களினும் ஆயுள் குறைவு

ஒரு நொடியோ

இரு நோடியோ

சில நோடிகளோ

காற்றும் நீரும்

கலந்து விளையாடும் போது

உருவாகி உருவாகி

உடைந்து உதிரும்

ஆயுட் காப்பீட்டுக்கு உள்ளாகாத

மருத்துவக் காப்பீட்டுக்கு மட்டுப்படாத

நீர்க்குமிழ்கள்

நின்று பார்க்க வைத்துச் சொல்கின்றன

காலம் என்பது கடத்துவதில் இல்லை

ஆயுள் என்பது நீள்வதில் இல்லை

*****

No comments:

Post a Comment

வெடித்துச் சிதறுவதிலிருந்து வெளியே வாருங்கள்!

வெடித்துச் சிதறுவதிலிருந்து வெளியே வாருங்கள்! மனச்சோர்வின் அதி தீவிர நிலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களில் ஒன்று ‘Burn Out’. 1970களில் ...