கிராமத்து நிலமா, நகரத்து நிலமா? எதுசிறந்தது?
ஒரு
கிராமத்து நிலத்தை விட நகரத்து நிலம் எந்த வகையில் விலை உயர்ந்தது?
சுகாதாரத்தைக்
கருத்தில் கொண்டால் இரு வகை நிலங்களும் எதிரெதிர் துருவங்களில் இருக்கக் கூடியவை.
கிராமத்து
நிலங்களில் இருக்கும் உயிர்ப்பான சூழல் நகரத்து நிலங்களில் கிடையாது. சுத்தமான நீர்,
சுத்தமான காற்று எதுவும் நகரத்து நிலங்களில் எதிர்பார்க்கக் கூடியவை இல்லை.
நகரத்து
நிலம் நீங்கள் படுக்கவும், ஓய்வெடுக்கவும், உடலியல் மற்றும் வாழ்வியல் செயல்களைச் செய்யவும்
உதவுகின்றன. இதைத் தாண்டி எதையும் செய்ய விடாமல் நகரத்து நிலம் உங்களை ஓட ஓட விரட்டியடித்து
நெருக்கடிக்குள் பந்தாடிக் கொண்டு இருக்கிறது.
நகரத்து
நிலம் உங்களைப் புதிது புதிதாக எதையாவது செய்து வைத்துக் கொண்டிருக்கலாம். அது உங்கள்
வாழ்க்கைக்கான போராட்டத்துடன் தொடர்பு உடையது.
நகரத்து
நிலங்களில் நீங்கள் அடிப்படைத் தேவைகளை அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டே இருப்பீர்கள்.
கிராமத்து
நிலம் உங்களைப் பாடாய்ப் படுத்தாது. அது உங்கள் தேவைகளைக் குறைத்து விடும். உங்களை
நிதானமாக இருக்க விடும்.
கிராமத்து
நிலங்கள் மிகவும் உயிர்ப்பானவை. இங்கு நீங்கள் செடிகள், கொடிகள், பறவைகள், மீன்களை
வளர்க்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. இயல்பாகவே அவை எல்லாம் இங்கே வளர்ந்து
கொண்டே இருக்கும்.
கிராமத்து
நிலங்களில் உங்களுக்கு மெனக்கெடல்கள் அதிகம் இல்லை. சுத்தமான காற்று, தூய்மையான தண்ணீர்,
இதமான சூழ்நிலை எல்லாம் இங்கு இருக்கின்றன. நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள் என்பதற்கான
அர்த்தம் இங்கே இருக்கின்றது. மாறாக நகரத்து நிலம் நீங்கள் இயந்திரமாகிறீர்கள் என்பதற்கான
பொருண்மையை உண்டாக்குகிறது.
உங்களுக்குப்
பொருளாதார மதிப்புகளில் அக்கறை இல்லையென்றால் நீங்கள் கிராமத்து நிலங்களைத்தான் உங்கள்
வாழ்க்கைக்காகத் தேர்ந்தெடுப்பீர்கள்.
உங்களுக்குப்
பொருளாதார மதிப்புகள்தான் முக்கியம் என்றால் உங்களுக்கு நகரத்து நிலங்கள்தான் லாயக்கு.
*****
No comments:
Post a Comment