8 Apr 2025

காலநிலைகளை எதிர்கொள்ளும் விளைச்சல்!

காலநிலைகளை எதிர்கொள்ளும் விளைச்சல்!

நெல் என்பது ஒவ்வோராண்டும் ஒவ்வொரு விதமான காலநிலையில் வளர்கிறது. அதன் தலைமுறைகளில் வெவ்வேறு விதமான காலநிலைகளை எதிர்கொண்டு வளர்கிறது.

நிகழ் ஆண்டு அதன் வளமான விளைச்சலுக்கு அது சாதகமான காலநிலையை எதிர்கொண்டு இருக்கலாம். அதைக் கொண்டு மட்டும் அடுத்த ஆண்டு அதை விட வளமான விளைச்சலைக் கற்பனை செய்து விட முடியாது.

அதற்கு முந்தைய ஆண்டுகளில் அது எதிர்கொண்ட மோசமான காலநிலைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். நெல் ஒவ்வொரு தலைமுறையிலும் வெவ்வேறு விதமான காலநிலைகளை எதிர்கொள்கிறது.

நாம் நிகழ் ஆண்டின் வளமான விளைச்சலை எண்ணி வியப்பதை விட, கடந்த ஆண்டுகளில் மோசமான காலநிலைகளை எதிர்கொண்டு தாக்குப்பிடித்ததையே அதிகம் பாராட்ட வேண்டும்.

நாம் நெல் எதிர்கொள்ளும் காலநிலைகளைப் பொருட்படுத்துவதில்லை. விளைச்சலே நம் கண்களுக்குத் தெரிகிறது.

ஒவ்வோரு ஆண்டும் காலநிலைக்கேற்ப நெல்லின் தலைமுறை ஒவ்வொரு விதமாகத் தாக்குப்பிடித்து வாழ வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நெல்லை மட்டுமல்ல, இந்த உலகத்தின் அத்தனை பயிர்களையும் அதன் விளைச்சலுக்காக நாம் போற்ற வேண்டும். அது குறைவாக இருக்கலாம், நிறைவாக இருக்கலாம். அது ஒரு பொருட்டில்லை. அவை நுட்பமாக இயற்கையையும் காலநிலைகளையும் எதிர்கொண்டு நமக்கு விளைச்சலைத் தருகிறது என்பதை நாம் எப்போதும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி!

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி! இருமொழிக் கொள்கையே தேவையில்லாத ஆணி எனும் போது மும்மொழிக் கொள்கை குறித்து என்ன சொல்வது? தாய்மொழி வழி...