செயலே பலம்! செயலின்மை பலவீனம்!
உங்கள்
செயலே உங்களைப் பலமாக்குகிறது
செயல்படுபவர்கள்
பலமானவர்கள்
செயல்படாமல்
இருப்பவர்கள் பலவீனர்கள்
பயன்படுத்தப்படாத
ஆயுதம் துருவேறி விடும்
உழாத
நிலம் களை மண்டி விடும்
அழாத
குழந்தை மரணித்து விடும்
விழாத
வாழ்வில் எழுச்சி இல்லாது போய் விடும்
சிறிது
சிறிதாக முயலுங்கள்
இக்கணத்தில்
செய்யும்
முயற்சியில்
மட்டும் மனம் வையுங்கள்
இன்னும்
கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்று
முயற்சித்துக் கொண்டே இருங்கள்
இலக்கை
அடைவீர்கள்
இலக்கைப்
பார்ப்பதினும்
இன்னும்
கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்பதைப்
பார்த்துக் கொண்டே இருங்கள்
இன்றைக்கு
இருக்கும் வலிமையைக் கொண்டு
இன்றை
முடியுங்கள்
நாளைக்கு
ஆக வேண்டியதை
நாளைப்
பார்த்துக் கொள்ளலாம்
நாளை
வரும் போது அது இன்றாகி விடும்
இன்றாகி
விடும் நாளில்
இன்றைக்கு
இருக்கும் வலிமையோடு
இன்றை
முடியுங்கள்
இப்படியே
போய்க் கொண்டிருந்தால்
உங்கள்
வாழ்வில் நாளை என்பது வராது
இன்று
என்பது மட்டும் நிறைந்திருக்கும்
செயல்படாமல்
இருப்பது பலவீனம்
செயலே
பலம்
இன்றைச்
சரியாக முடியுங்கள்
நாளை
வரும் போது அது இன்றாகி விடும்
நேற்றைய
இன்றைச் சரியாக முடிப்பவர்கள்
நாளைய
இன்று வரும் போது
வெற்றியாளர்களாகப்
புன்னகைக்கிறார்கள்
*****
No comments:
Post a Comment