வீடு மற்றும் நிலம் எப்படி மதிப்பற்றதாகிறது?
நிலத்திற்கு
ஒரு மதிப்பு இருக்கிறது, வீட்டிற்கு ஒரு மதிப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த மதிப்பு என்பது வீடோ, நிலமோ வாங்கப்பட்டுக் கொண்டே இருந்தால் மட்டுமே உண்டாகும்
மதிப்பாகும்.
எப்போது
வாங்கப்படுவது நின்று போகிறதோ, அங்கே அந்த நிலமானாலும், வீடானாலும் மதிப்பற்றதாகி விடும்.
வீடு,
நிலம் என்றில்லை, தங்கமே என்றாலும் அது வாங்கப்படவில்லை என்றால் நிலைமை அதுதான். துரதிர்ஷ்டவசமாகத்
தங்கமானது வாங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
நீங்கள்
ஒரு பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் காலாவதி தேதி வரை அதற்கு விற்பனை மதிப்பு இருக்கும்.
அதற்குள் அது வாங்கப்பட்டாக வேண்டும். காலாவதி தேதியை அடைந்து விட்டால் அந்தப் பொருளுக்கு
என்ன மதிப்பு இருக்கும்? அந்தப் பொருளைத் தூக்கி நீங்கள் குப்பைத் தொட்டியில்தான் போட
வேண்டும். அப்போது அதன் மதிப்பு பூஜ்ஜியம்தான்.
நிலத்தின்
கதையும் இப்படித்தான். வீட்டின் கதையும் இப்படித்தான். நீங்கள் ஒரு வீட்டை வாங்க விரும்புகிறீர்கள்
அல்லது ஆசைப்படுகிறீர்கள். உங்களைப் போல பலரும் விருப்பமோ ஆசையோபட்டால், வீட்டின் விலை
உயரே பறந்து கொண்டிருக்கும்.
நிலைமை
அப்படியில்லை என்றால், அதாவது நீங்கள் உட்பட யாருமே அந்த வீட்டை வாங்க விரும்பவில்லை
என்றால், அந்த வீட்டை நீங்கள் மதிப்பிற்குள் கொண்டு வர முடியாது. அப்போது உங்களுக்கு
இரண்டு நிலைமைகள்தான் அந்த வீட்டைப் பொருத்தவரை இருக்கும். ஒன்று அந்த வீட்டைக் கைவிட்டு
விடலாம். அல்லது இலவசமாக யாருக்காவது கொடுத்து விடலாம்.
எந்தப்
பொருளாக இருந்தாலும் அது வாங்கப்பட வேண்டும். வாங்குவதற்கான வாடிக்கையாளர்களின் விருப்பங்களும்
ஆசைகளும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
விருப்பமோ,
ஆசையோ விலையை ஏற்றும் என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். யாருக்கும் எவ்வித
விருப்பமோ, ஆசையோ இல்லை என்றால் இவ்வளவு பெரிய வணிக உலகமும் நுகர்வு கலாச்சாரமும் இயங்குவதே
கடினமாகி விடும்.
மனிதர்களால்
விருப்பமோ, ஆசையோ இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் அதை அளவாக வைத்துக் கொள்ள முடியும்.
ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு விருப்பங்களையும் ஆசைகளையும் அளவாக வைத்துக் கொள்கிறோமோ,
அந்த அளவுக்குப் பொருளின் விலையும் மட்டுப்பாடாக இருக்கும்.
உதாரணத்துக்கு
ஆப்பிள் ஐ திறன்பேசியை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு கூட்டம் அதை வாங்க முண்டியடிக்கவில்லை
என்றால், அவர்களால் அவ்வளவு பெரிய விலையை அதற்குத் தீர்மானிக்கவே முடியாது. இதே விசயம்
ரோலக்ஸ் கைகடிகாரத்தில் துவங்கி, பென்ஸ் மகிழ்வுந்து வரை அனைத்துக்குமே பொருந்தும்.
ஒரு
பொருளின் விலை அவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால் அந்த அளவுக்கு விலை கொடுத்து வாங்க
மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றுதான் அதற்கு அர்த்தம். அவ்வளவு விலை கொடுத்து வாங்க
முடியாது என்று மக்கள் பின்வாங்கினால் நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை. ஒன்று அதன்
விலையைக் குறைத்தாக வேண்டும் அல்லது அதன் உற்பத்தியையே நிறுத்தியாக வேண்டும். மற்றுமொரு
வழியாக மக்களின் எதிர்பார்ப்பையும் ஆசையையும் தூண்டும் வேறொரு பொருளைக் கண்டறிந்து
அதில் நிறுவனங்கள் கவனம் செலுத்தியாக வேண்டும்.
மக்கள்
தங்கள் விருப்பங்களையும் ஆசைகளையும் விழிப்புணர்வோடு கையாளும் வழக்கத்திற்கு வந்து
விட்டால், மிகை மதிப்பில் பொருட்கள் விற்பனையாக வாய்ப்பே இல்லை.
*****
No comments:
Post a Comment