25 Feb 2025

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்!

முடியும் என்றும் சொல்ல முடியாது

முடியாது என்றும் சொல்ல முடியாது

அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள்

“அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன்”

 

திருமணம் செய்து கொள்வோம் என்றும் சொல்ல முடியாது

திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் சொல்ல முடியாது

அப்போது காதலர்கள் சொல்வார்கள்

“பெற்றோர்கள் சம்மதித்தால் செய்து கொள்வோம்”

 

கொடுக்கிறேன் என்றும் சொல்ல முடியாது

கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது

அப்போது ஆள்வோர்கள் சொல்வார்கள்

“குழு அமைப்போம் அல்லது கமிஷன் அமைப்போம்”

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...