19 Feb 2025

பிரச்சனை இல்லாத ஒருவர்

பிரச்சனை இல்லாத ஒருவர்

கடன் என்றால் பயந்தார் அப்பா

கடன் வாங்க போட்டி போடுகிறான் மகன்

வங்கிகள் கடன் தருகின்றன

வட்டிக் கடைகள் கடன் தருகின்றன

ஏதேதோ பெயரில் உருவாகி வரும்

நிதி நிறுவனங்கள் கடன் தருகின்றன

மொபைல்களும் கடன் தருகின்றன

கடன் வாங்காமல் இருக்க முடியாது

கடனுக்குப் பயந்து ஒளிய முடியாது

எந்நேரமும் ஒலிக்கின்ற

அலைபேசியில் கடன் தந்தவர்களின் அழைப்புகள்

அலைபேசியை அணைத்துப் போட்டால்

அன்பிற்குரியவர்களின் எண்களுக்கு

ஆபாசச் செய்திகள் அனுப்பப்படுகின்றன

வேலை தேடுபவராக இருக்கலாம்

பண முடையில் இருப்பவராக இருக்கலாம்

சம்பாதிக்க ஆசைப்படுபவராக இருக்கலாம்

பணம் இல்லாமல் இருப்பது பிரச்சனையா

கடன் இல்லாமல் இருப்பது பிரச்சனையா

அலைபேசியில் சூனியக்காரர்கள் உலவும் உலகில்

கையில் அலைபேசி இல்லாத

பைத்தியக்காரர்கள் மட்டுமே பிரச்சனை இல்லாதவர்கள்

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...