நான் ஸ்டாப் குடியர்களை நாடு என்ன செய்ய வேண்டும்?
ஒரு
கோப்பை என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். அது இரண்டு கோப்பையாகின்றன. பின்பு மூன்று கோப்பைகளாகின்றன.
அடுத்து நான்கு கோப்பைகளாகின்றன. தொடர்ந்து எத்தனைக் கோப்பைகளாகின்றன என்பது ஒரு கட்டத்தில்
குடிப்பவர்களுக்கே தெரியாது.
அதனாலோ
என்னவோ, மதுவைப் பொருத்த வரையில் பாதிப்பில்லாத குறைந்த அளவு என்பது இல்லவே இல்லை என்று
அடித்துச் சொல்கிறது உலகச் சுகாதார அமைப்பு.
அருந்திய
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மூளையைப் பாதிக்க ஆரம்பிக்கிறது மது. அடுத்தடுத்து அருந்தும்
போது நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், செரிமான மண்டலம் என்று அது பாதிக்காத மண்டலங்களே
இல்லை.
மதுப்பழக்கம்
தொடர்கதையானால் கல்லீரலின் கதை சிறுகதையாகச் சுருங்க ஆரம்பித்து, கடைசியில் ஒரு நிமிட
கதையாகி, கட்டக் கடைசியாக ஒரு சொல் கதையாகவும் ‘மரணம்’ என்று ஆகி விடுகிறது.
மதுவைக்
குடிக்க குடிக்க சீராக இருக்கும் இரத்த அழுத்தம் மாறாக அமைகிறது.
சிறுநீரகப்
பாதிப்புகள், இதய நோய்கள், பக்கவாதம் என்று தொடர்ந்து புற்றுநோய் வரை கொண்டு போய் விட்டு
விடுகிறது மதுப்பழக்கம்.
பெரியவர்களை
விட சிறியவர்கள் அருந்தும் போது அவர்களின் உடலில் சேரும் ஆல்கஹால் அளவு அதிகமாக இருக்கிறது.
மிகச் சிறிய வயதிலேயே குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறவர்கள் வெகு விரைவிலயே குடி அடிமைகளாய்
மாறி விடுகிறார்கள். அந்த வகையில் குடிப்பழக்கம் குறிப்பிட்ட வயதைத் தாண்டி தள்ளி ஆரம்பிப்பது
கூட அவசியமாகிறது.
எவ்வளவு
சிறிய வயதில் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறாரோ, அந்த அளவுக்கு அவருக்குப் பாதிப்புகள்
மிக அதிகமாகவே இருக்கின்றன. ஒருவருக்குக் குழந்தைப் பருவத்திலேயே குடிப்பழக்கம் ஆரம்பித்து
விடுமானால் அவர் வாலிபப் பருவத்தைக் கடந்து முடிப்பாரா என்பது கூட சந்தேகம்தான்.
இவையெல்லாம்
சாராயம் நல்லச் சாராயமாக இருந்தால். அதுவே கள்ளச்சாராயமாக இருந்து விட்டால், கண்பார்வை
இழப்பு, உயிர் பறிபோதல் என்று எல்லாம் உடனடி தாக்குதல்கள் மற்றும் தண்டனைகள்தான்.
மது
அருந்துவதாகச் சொல்பவர்களை, ஒரு கட்டத்தில் மது அருந்த ஆரம்பித்து விடுகிறது.
நன்றாக
இருந்த பல கிராமங்களைச் சீரழித்த பாவம் டாஸ்மாக்கிற்கு உண்டென்றால், நன்றாக வளர்ந்து
வந்திருக்க வேண்டிய பல குடும்பங்களைச் சீரழித்த கொடுமை மது அருந்துவோர்களால் நேர்ந்திருக்கிறது.
ஒருவரிடம்
பணம் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் மது வாங்கி அருந்தலாம் எனும் நிலை நீடிப்பது
ஒரு நல்ல குடியாட்சிக்கு அழகாக இருக்காது. மதுவை ஒழிக்க முடியாவிட்டாலும், ஒருவர் ஒரு
நாளில் இவ்வளவுதான் மது வாங்க வேண்டும் என்ற கட்டுபாட்டைக் கொண்டு வர வேண்டியது குடியாட்சி
நாடுகளின் கட்டாயம்.
வருமான
வரி எண்ணோடு (பான் எண்) ஆதார் எண்ணை இணைத்துக் கண்காணிக்க முடியும் போது, வங்கிக் கணக்கு
எண்ணோடு ஆதார் எண்ணை இணைத்து மேலாண்மை செய்ய இயலும் போது, வாக்காளர் அட்டை, குடும்ப
அட்டை ஆகியவற்றோடும் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்க்கக் கூடும் போது, ஏன் மது அருந்துவோரை
ஆதார் எண் கொண்டு கண்காணித்து அவர்கள் வாங்கும் மதுவின் அளவைக் கட்டுப்படுத்த முடியாது?
ஆதார்
எண்ணைக் கொண்டு கை விரல் ரேகை பதித்துதான் ஒருவர் மது பானம் வாங்க முடியும் என்று நிலையை
ஏற்படுத்தினால்தான் ஒருவர் எவ்வளவு அளவுக்கதிகமாக மது வாங்குகிறார் என்பதற்கான தரவுகளாவது
நமக்குக் கிடைக்கும். தரவுகள் கிடைத்தால்தான் அறிவுப்பூர்வமான கட்டுப்பாட்டு முறைகளைக்
கொண்டு வரமுடியும்.
ஒருவேளை
இப்படிச் செய்வது மது வருமானத்தைப் பாதிப்பதாக அமையுமோ? அப்படி யோசித்தால் நீண்ட காலம்
இருக்க வேண்டிய ஒரு மது வாடிக்கையாளரைக் குறுகிய காலத்தில் இழப்பது குறித்தும் யோசிக்க
வேண்டும் மது வருமானப் பெருமான்கள்.
மது
வருமானத்துக்காக மது ஒழிப்பு குறித்தோ, குடி அடிமைகளால் குடிக்காமல் இருப்பது குறித்தோ
யோசிக்க முடியாது என்றால், நாம் அதை கட்டுபாடான ஒரு நிலைக்குக் கொண்டு வருவது குறித்தாவது
யோசிக்க வேண்டும்.
ஏன்
நாம் இதை இவ்வளவு அழுத்தம் கொடுத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது?
குடிப்பழக்கம்
பல நேரங்களில் சிகிச்சைகளுக்கும் எமனாக அமைந்து விடுகிறது. ஆபத்தான நிலைகளில் மருத்துவமனைக்குக்
கொண்டு சொல்லப்படும் பலரைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கு மது அருந்தியிருப்பதும் ஒரு
காரணமாக அமைந்து விடுகிறது.
“மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.” (குறள், 602)
என்ற
வள்ளுவர் வாக்கு ஒன்று உண்டு.
அதையே
இப்படி மாற்றி,
குடியை குடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
என்று
சொன்னாலும் பொருத்தமாகத்தான் அமைகிறது.
கள்ளுண்ணாமை
என ஓர் அதிகாரமே இருக்க, இப்படி ஒரு குறள் மாற்றம் தேவையா என நீங்கள் கேட்கலாம்.
திருக்குறளில்
மது அருந்தாமைக்கு ஓர் அதிகாரம் இருப்பதைப் போலவே, நாட்டில் டாஸ்மாக்கைத் திறக்காமல்
வைத்திருக்கவும் அல்லது அதைக் கட்டுப்படுத்தவும் ஓர் அதிகாரம்தானே தேவைப்படுகிறது.
அப்படி ஓர் அதிகாரத்தை ஓட்டுக்குக் குவார்ட்டரைக் கொடுக்காமல் ஓட்டு வாங்கி வெற்றி
பெறும் ஒருவரால்தான் உருவாக்க முடியும். அப்படி ஒருவர் வந்தால்தான் தமிழகமும் விடியும்.
விடியுமா?
கு.ப.ரா.தான்
பதில் சொல்ல வேண்டும்!
*****
No comments:
Post a Comment