10 Feb 2025

ஐம்பது ரூபாய் நட்டமும் ஐநூறு ரூபாய் லாபமும்

ஐம்பது ரூபாய் நட்டமும் ஐநூறு ரூபாய் லாபமும்

இருநூறு ரூபாய் பொருட்கள்

நூறு ரூபாய் என்றதும்

திருவிழாக்களைத் தோற்கடிக்கும் கூட்டம் கூடியது

வந்தவர்கள் பொருட்களை அள்ளிச் சென்றதில்

பொருளொன்றுக்கு ஐம்பது ரூபாயாவது

நட்டமாயிருக்கும் என்று பேசிக் கொண்டார்கள்

ஐம்பது ரூபாய் நட்டத்தில் விற்று

வாங்க வந்தவர்கள் குறித்த தகவல்களைத்

திரட்டிக் கொண்டவர்

வாட்ஸ்ஆப்பிலும் பேஸ்புக்கிலும்

மின்னஞ்சலிலும் குறுஞ்செய்திகளிலும்

புதுப்புது அறிவிப்புகளைத் தந்தபடி

ஐம்பது ரூபாய் நட்டத்தை

ஐநூறு ரூபாய் லாபமாக அள்ளத் தொடங்கினார்

அத்துடன்

இப்போதெல்லாம் வருடத்துக்கு ஒரு முறை

ஐம்பது ரூபாய் நட்டத்தில் எதையாவது விற்க தயாராகி விடுகிறார்

*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...