4 Feb 2025

கதை புனைந்தவரின் துர்பாக்கியம்

கதை புனைந்தவரின் துர்பாக்கியம்

என் கதையை யாரும் கேட்கவில்லை

எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறேன்

கேட்போர் யாருமில்லாமல் எப்படி சொல்வது

அவ்வளவு அருமையான கதையை

விரும்பாதவர்களும் இருப்பார்களா என்ன

நான்கு சுவரிடம் மலையிடம் மரத்திடம்

கதைகளைச் சொல்லியிருக்கிறேன்

பறவைகளிடம் சொல்ல முயற்சித்த போது

அவை பறந்து விட்டன

காற்றிடம் சொல்ல முயற்சித்த போது

அது நகர்ந்து விட்டது

புழுக்களிடம் பூச்சிகளிடம் சொன்ன போது

அதி வேகமாக கடந்து விட்டன

அசைய முடியாதவை என் கதைகளைக் கேட்டதும்

நகரக் கூடியவை என் கதையைக் கேட்காமல் விட்டதும்

தற்செயலாக அன்றி காரண காரியங்களோடு நிகழ்ந்தன

நான் என் கதையில் ஒரு தவறு செய்திருந்தேன்

மாபெரும் தவறு செய்திருந்தேன்

தோல்விக் கதையை வெற்றிக் கதையாக

மாற்றாமல் விட்டிருந்தேன்

மாபெரும் அந்த தவறு என் கதையை

யாரும் கேட்க முடியாதபடி செய்து விட்டது

*****

No comments:

Post a Comment

கதை புனைந்தவரின் துர்பாக்கியம்

கதை புனைந்தவரின் துர்பாக்கியம் என் கதையை யாரும் கேட்கவில்லை எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறேன் கேட்போர் யாருமில்லாமல் எப்படி சொல்வது ...