இனியும் ஓட்டுக்குப் பணம் வாங்கினால்…
ஓட்டாண்டிகள் ஆக வேண்டியதுதான்!
நான்
வளர்கிறேனே அம்மா (மம்மி) என்கிற விளம்பரத்தைப் பார்த்துக் காம்ப்ளான் குடிக்க விரும்பிய
தலைமுறைகளைச் சேர்ந்தவர்களே!
தொலைக்காட்சி,
அலைபேசி தொடங்கி வீட்டிற்குத் தேவையான சாதாரண அண்டா, குண்டான் வரை மாதாந்திரத் தவணையில்
வாங்கிக் குவிக்கும் இந்தியப் பெருங்குடி மக்களே!
எது
நடந்தால் எனக்கென்ன என்று அப்படித் தவணை முறையில் வாங்கி வைத்த அண்டான் குண்டான் வரை
அடகு வைத்து மதுபானக் கடையில் (டாஸ்மாக்கில்) முந்திக் கொண்டு சந்தி சிரிக்கும் வகையில்
குடித்து விட்டு சலம்பித் திரியும் தமிழ்நாட்டின் மது பிரியர்களே!
உலகில்
வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத்
தெரியுமா?
அந்தச்
சந்தோசத்தைக் கொண்டாடத்தான் நீங்கள் தினம் தினம் குடிக்கிறீர்கள், கடன் வாங்கி வாங்கிப்
பொருட்களை வாங்கிக் குவிக்கிறீர்கள் என்கிறார்களா?
அத்துடன்,
வளர்ந்து வரும் இந்தியாவில் வளர்ந்து வரும் முதன்மை மாநிலம் தமிழகம் என்பதும் உங்களுக்குத்
தெரியுமா?
இது
தெரிந்தால், இன்னொரு பாட்டில் மதுவை அலாக்காக அண்ணாத்தியிருப்பேன், இன்னும் கொஞ்சம்
கூட தவணை முறையில் பொருட்களை வாங்கிப் போட்டிருப்பேன் என்கிறீர்களா?
கொஞ்சம்
பொறுங்கள்! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம் இருக்கிறது.
இந்தியாவின்
கடன் 60 லட்சம் கோடியாகி விட்டது. 60 லட்சமல்ல மக்களே. அறுபது லட்சம் கோடி.
தமிழ்நாட்டின்
கடன் எட்டு லட்சம் கோடியைத் தாண்டி விட்டது.
அதனால்
எனக்கென்ன என்கிறீர்களா?
நீங்கள்
கடன் வாங்கி விட்டு, தவணைத் தொகையைச் சரியாகச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் என்பது
உங்களுக்குத் தெரியாதா?
நீங்கள்
கடனில் வாங்கிய இருசக்கர வாகனத்தை அலாக்காகத் தூக்கிக் கொண்டுச் சென்று விடுவார்கள்
இல்லையா?
வாங்கிய
கடனுக்கான தவணைத்தொகையைச் சரியாகச் செலுத்தாவிட்டால் நடுசாலையில் நின்று, சந்தி சிரிக்கும்
வகையில் தண்டவாளம் வண்டவாளம் ஏறும் அளவுக்குப் பேச்சுகளைக் கேட்க வேண்டும் இல்லையா?
வீட்டுக்கு
இப்படி என்றால், நாட்டுக்கும் இப்படித்தானே?
கடனைச்
சரியாகச் செலுத்தும் வரையில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. சரியாகச் செலுத்த முடியாத
நிலை வரும் போது என்ன நடக்கும்?
வீடு
திவால் ஆனால், ஊரைக் காலிசெய்துவிட்டு இன்னொரு ஊருக்குச் சென்று தலைமறைவாக வாழலாம்.
நாடும்
மாநிலமும் திவால் ஆனால், இன்னொரு நாட்டுக்குச் சென்று அகதியாக வாழ முடியுமா? எல்லாரும்
மல்லையாக்களா? அப்படி வாழ்வதற்கு?
அப்படியெல்லாம்
நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?
இலங்கையில்
என்ன நடந்தது?
பாகிஸ்தானில்
என்ன நடக்கிறது?
வங்கதேசத்தில்
நடப்பது என்ன?
நிலைமையைச்
சமாளிக்க எப்போதாவது கடன் வாங்கலாம்.
எப்போதும்
கடன் வாங்கியே நிலைமையைச் சமாளிப்பது என்றால், அது எப்படி?
நம்
நாட்டுக்கும், நம் மாநிலத்துக்கும் கடன்கள் அதிகரித்து வருவது நல்லதோர் அறிகுறி அல்ல.
கடன்
என்பது காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் பாம்பு.
கடன்
என்பது, நன்றாகச் சென்று கொண்டிருக்கும் கப்பலில் உருவாகிப் பெரிதாகிக் கொண்டிருக்கும்
ஓட்டை.
வரவுக்குள்
செலவு இருக்க வேண்டும்.
சட்டியில்
இருந்தால்தான் அகப்பையில் வரும்.
திருவள்ளுவரும்,
“ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.” (குறள், 478)
என்கிறார்.
அளவோடு செலவு இருந்தால் வரவைப் பற்றிய கவலை இல்லை என்கிறார். வரவே இல்லாமல், செலவு
அளவுக்கு மிஞ்சிப் பேனால்… அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும் போது, நஞ்சாகும் கடன்
அளவுக்கு மிஞ்சினால்… “கஞ்சி குடிப்பதற்கு
இலார் - அதன் காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்” என்று பாரதியார் சொன்னாரே!
அப்படி ஒரு நிலைமைக்கு ஆளாக வேண்டியதுதான்.
வரவைத்
தாண்டி செலவு மிஞ்சினால், என்னதான் அகப்பையை வைத்துக் கிண்டினாலும் சட்டியில் ஒன்றும்
வராது.
ஒன்றுமில்லாத
சட்டியைத் தூக்கிப் போட்டு உடைத்து விட்டு ஓட்டாண்டிகளாக இருக்க வேண்டியதுதான், உடைந்து
போன சட்டிகளின் ஓடுகளாகக் கிடப்பதைப் போல!
இனியும்
ஒட்டாண்டிகளாக ஆகக் கூடாது என்றால், ஓட்டைப் போட பணம் கொடுத்து நம்தை ஆண்டிகளாக்கும்
அரசியல் அமைப்புகளிடம் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
நாட்டின்
பொருளாதாரம் மற்றும் வரவு – செலவு குறித்துக் கேள்விக் கேட்கும் விழிப்புணர்வை ஒவ்வொரு
குடிமகனும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
*****
No comments:
Post a Comment