இந்தப் புத்தாண்டிலிருந்து செய்யக் கூடாதவை! – 2025
ஒவ்வொரு
புத்தாண்டுக்கும் என்னென்ன செய்ய வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கிறோம். அதை எத்தனை
பேர் அப்படியே கடைபிடிக்கிறோம்? அதனால் இந்தப் புத்தாண்டில் என்னென்ன செய்யக் கூடாது
என்று ஓர் உறுதிமொழி எடுப்போம். அதை எத்தனை பேர் செய்யாமல் இருக்கிறோம் என்று பார்ப்போமே.
மிகவும்
நாகரிகமாக உறுதிமொழி எடுத்தால் அதை செய்யாமல் போய் விடுகிறதே. அதனால் படு லோக்கலாக
இந்தச் செய்யக் கூடாத உறுதிமொழிகள் அமைய வேண்டும் என்று நோக்கில் இந்த உறுதிமொழிகள்
அமைக்கப்படுகின்றன. நீங்களும் இந்த உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டு, எத்தனை பேர் இதை
முழுமையாகக் ஆண்டு முழுவதும் கூடைபிடித்தீர்கள் என்பதை இந்த ஆண்டின் முடிவில் தெரிவியுங்கள்.
இதோ உறுதிமொழிகள் :-
டிரெட்மில்
வாங்கி
அதில்
துணி காயப் போடக் கூடாது.
பெரிய
புத்தகம் வாங்கி
தலையணையாய்
வைத்து படுத்துத் தூங்கக் கூடாது.
லட்ச
ரூபாய்க்கு லேப்டாப் வாங்கி
அதில்
சினிமா படம் பார்க்கக் கூடாது.
ஆப்பிள்
போன் வாங்கி
அதில்
ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாடக் கூடாது.
காஸ்ட்லி
கார் வாங்கி
அதை
கார் செட்டிலே போட்டு வைக்கக் கூடாது.
ஆசை
ஆசையாக அபார்ட்மென்ட் வாங்கி
அதை
வாடகைக்கு விடக் கூடாது.
மேட்ரிமோனியலில்
பதிவு செய்து
நாற்பது
வயதில் திருமணம் செய்யக் கூடாது.
இன்டர்நெஷனல்
பள்ளியில் படிக்க வைத்து
பிள்ளைக்கு
பஞ்சர் ஒட்டும் கடை வைத்துக் கொடுக்கக் கூடாது.
அமேசான்
நெட்பிளிக்சுக்குப் பணம் கட்டி விட்டு
தியேட்டரில்
படம் பார்க்கக் கூடாது.
சீனி
வாங்க சூப்பர் மார்கெட்டுக்குப் போய்
கூடை
நிறைய பொருட்களை அள்ளி வரக் கூடாது.
புது
மாடல் ஆடை வாங்கி
ஒரு
முறை போட்டு விட்டு மறுமுறை மறந்து விடக் கூடாது.
ஊரெல்லாம்
கடன் வாங்கி வைத்து
செல்போனை
ஸ்விட்ச் ஆப் செய்யக் கூடாது.
பீட்சாவுக்கு
ஆர்டர் செய்து
அதில்
பாதியைத் திங்க முடியாமல் தூக்கிப் போடக் கூடாது.
செல்பி
எடுக்க ஆசைப்பட்டு
தண்டவாளத்தில்
தலைவைத்து படுக்கக் கூடாது.
சம்பளம்
வந்ததும் ஷாப்பிங்கை முடித்து விட்டு
கிம்பளத்துக்கு
அலையக் கூடாது.
பார்ட்டி
வைக்கிறேன் என்று
தாலி
கட்டும் நேரத்தில் மட்டையாகி விடக் கூடாது.
வாழ்க்கையை
அனுபவிக்கிறேன் என்று
கடைசி
காலத்தை ஹாஸ்பிட்டலில் கழிக்கக் கூடாது.
இந்தச்
செய்யக் கூடாத உறுதிமொழிகள் பிடித்திருந்தால், அது குறித்து ஒரு கருத்துப் போடக் கூடாது
என்ற உறுதிமொழியை எடுத்து விடாமல், ஒரு இரண்டு வார்த்தை கருத்துப் போடுங்கள். கருத்துப்
பெட்டி காலியாக இருக்கிறது.
*****
No comments:
Post a Comment