ஓ! இந்தியனே விழிப்புணர்வோடு இருப்பாயாக!
முதலில்
30 மருந்துகள் தரமற்றவை
பிறகு
45 மருந்துகள் தரமற்றவை
என்று
சொல்லத்தான் நாட்டில் நிர்வாக அமைப்புகள் இருக்கின்றன.
தரமற்ற
மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாட்டில் எதுவுமே இல்லை.
அந்த
மருந்துகள் குறித்து மக்கள்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமாம்.
விழிப்புணர்வோடு
இருந்து,
அந்த
மருந்துகள் தரமானவையா? தரமற்றவையா? என ஆய்வகத்தில் பரிசோதித்துப் பார்த்து, மக்கள்தான்
எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமோ என்னவோ?
ஒரு
மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளைப் படித்தவர்கள் கூட படித்துப் புரிந்து கொள்ள
முடியாத தேசத்தில்,
இப்படி
தரமானதோ, தரமற்றதோ எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உயிரோடு இருக்கிறானே இந்தியன்!
எந்த ஜென்மத்திலோ செய்த புண்ணியம்தான் அவனைக் காப்பாற்றுகிறது.
*****
நாட்டில்
10 போலி பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன,
25 போலி
பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்று சொல்லவும் நிர்வாக அமைப்புகள் இருக்கின்றன.
போலி
பல்கலைக்கழகங்கள் எனத் தெரிந்து நடவடிக்கை எடுக்கத்தான் அமைப்புகள் இல்லை.
அவை
போலி பல்கலைக்கழகங்கள் எனத் தெரிந்து மாணவர்கள்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமாம்.
விழிப்புணர்வைக்
கொடுக்க வேண்டிய கல்வியையே விழிப்புணர்வோடு இருந்து கண்டுபிடித்துக் கற்க வேண்டும்
என்றால்,
ஓ இந்தியனே!
உன் முன்னோர்கள் செய்த முன்ஜென்ம வினையால்தான் நீ போலியல்லாத ஒரு பல்கலைக்கழகத்தில்
படித்துக் கொண்டிருக்கிறாய்.
*****
No comments:
Post a Comment