5 Jan 2025

வழியும் குருதியை வாங்கிக் கொள்ளுங்கள்!

வழியும் குருதியை வாங்கிக் கொள்ளுங்கள்!

கூரிய கத்தியால் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த போது

கீரை வாங்கவில்லையா என்றாள்

வாசல் தேடி வந்த கூடைக்காரி

இப்பொதெல்லாம் முட்டைகோஸ்தான் என்றேன்

முடக்கத்தான் உடலுக்கு நல்லது என்றாள்

பீட்ஸாவைத் தவிர வேறு எதுவும் ஒத்துக் கொள்வதில்லை என்றேன்

நாட்டுக் கோழிகள் வளர்ப்பதாகவும் வேண்டுமானால்

நாளை கொண்டு வருவதாகவும் சொன்னாள்

பிராய்லருக்கு மாறி விட்டதைச் சிரமப்பட்டுச் சொன்னேன்

கம்பங்கூழ் விற்பதைச் சொன்னவளுக்கு

ஸொமேட்டோவில் வாங்குவதைச் சொல்ல வேண்டியதாகி விட்டது

ஆப்பம் இடியாப்பம் உரைப்பு அடை பிட்டு என்று

சொல்ல வாயெடுத்தவளை

ப்ளாக் பாரெஸ்ட் நூடுல்ஸ் பிரெட் டோஸ்ட் என்று

சொல்லி வாயடைக்க வேண்டியதாகி விட்டது

என்னிடமிருந்து வாங்குவதற்கு ஏதுமில்லையா என்று

ஏக்கமாய்க் கேட்டு விட்டு

உங்களிடமிருக்கும் கத்தியையாவது தாருங்கள் என்றவள்

தந்ததும் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு

வழியும் இந்தக் குருதியையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள்

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...