திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?
விடிவதற்குள்
ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச்
சவால் விடுகிறான் அரசன்.
அப்படிப்
பாடினால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்கிறான்.
ஒன்றா,
இரண்டா, மூன்றா, நான்கா?
எண்ணிப்
பாடுவதற்கு?
நான்கு
கோடி.
எண்ணி
முடிப்பதற்கே நான்கு நாட்களாவது ஆகுமே.
ஔவையார்
அந்தச் சவாலை ஏற்றுப் பாடுகிறார்.
அவர்
பாடிய பாட்டு,
அந்த
நான்கு கோடி பாட்டு!
“மதியா தார்முற்றம் மதித்தொரு காற்சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர்உண் ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
கோடிகொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல்
கோடி பெறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை
கோடி பெறும்”
இந்தப்
பாடலில் கோடி என்ற சொல் நான்கு இடத்தில் வருவதால் இது நான்கு கோடி பாட்டாகி விடுகிறது.
அப்படியானால்,
திருக்குறளில்,
1) ஒரு
பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும்
அல்ல பல. (குறள், 337)
2) வகுத்தான்
வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும்
துய்த்தல் அரிது. (குறள், 377)
3) பழுதெண்ணும்
மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது
கோடி உறும். (குறள், 639)
4) பேதை
பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை
கோடி உறும். (குறள், 816)
5) நகைவகையர்
ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த
கோடி உறும். (குறள், 817)
6) அடுக்கிய
கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ
செய்தல் இலர். (குறள், 954)
7) கொடுப்பதூஉம்
துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண்
டாயினும் இல். (குறள், 1005)
8) கரவாது
உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை
கோடி உறும். (குறள், 1061)
என்று
இப்படி கோடி எனும் எண்ணுப்பெயர் எட்டு குறட்பாக்களில் வருகிறது. அப்படியானால் திருக்குறள்
என்பது எட்டு கோடி பாட்டா என்றால் அதையும் தாண்டிய கோடி மேற்படி குறட்பாக்களில் இருக்கிறது.
மேற்படி சில குறட்பாக்களில் எழுபது கோடி, பத்தடுத்த கோடி, அடுக்கிய கோடி என வருவதைக்
கொண்டு கணக்கிட்டால் திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டுக்குச் சமம்தானே?
*****
No comments:
Post a Comment