படித்தவன் பாவம் செய்தால்…
படித்தவன்
பாவம் செய்தால் அய்யோ என்று போவான் என்பார் பாரதியார்.
அப்படியானால்,
படிக்காதவன் பாவம் செய்தால்…
யார்
பாவம் செய்தாலும் அய்யோ என்றுதான் போவார்கள். படிக்காதவர்களிடம் இருக்கும் அறியாமை
காரணமாக அவர்கள் பாவம் செய்வதை அறியாமல் கூட செய்திருக்கலாம்.
படித்தவர்களுக்கு
அந்த அறியாமை இருக்காது இல்லையா? ஆகவே படித்தவர்கள் பாவம் செய்யும் போது, அவர்கள் அறிந்தே
அதைச் செய்வதாகத்தானே அர்த்தமாகிறது. அறியாமல் செய்து விடுகிற பாவத்தை விட, அறிந்து
செய்கிற பாவம் பெரும் பாவம் அல்லவா! இதை உணர்த்தும் விதமாகத்தான் பாரதியார் படித்தவர்கள்
பாவம் செய்யக் கூடாது என்கிறார். அப்படி செய்தால் அய்யோ என்று போவார்கள் என்று சபிக்கிறார்.
பொதுவாகப்
படித்தவர்களிடம் நல்லவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பைச் சமூகம் வைத்திருக்கிறது.
அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் படித்தவர்களும் பாவம் செய்வார்களானால், அதை எப்படி
ஏற்க முடியும்?
படித்தவர்கள்
எப்படியும் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்கான அறிவையும் ஆற்றலையும்
படிப்பு வழங்குகிறது. அப்படி வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொண்ட பிறகு, அந்த வேலையில்
தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் தகுதியையும் திறமையையும் படித்தவர்கள் வளர்த்துக் கொள்ள
வேண்டும். அதை விடுத்து வேலைவாய்ப்பை அடைந்ததும் அவர்களும் சராசரி மனிதர்கள் போல் ஆகி
பாவங்களைச் செய்வதன் மூலம், தங்கள் வேலைவாய்ப்பை நிலைநிறுத்திக் கொண்டால், அதை எப்படி
ஏற்க முடியும்? அதன் பின் அவர்கள் கற்ற கல்விக்குத்தான் என்ன பயன் இருக்க முடியும்?
சராசரி
மனிதர்களாக இருப்பதற்குத்தான் இந்தக் கல்வி பயன்படும் என்றால், லட்சிய மனிதராக இருப்பதற்குப்
பயன்படாது என்றால், அது கல்வியின் குறைபாடாக மட்டும் பார்க்க முடியாது. அந்தக் கல்வியைக்
கற்ற படித்தவர்களின் அக்கறையற்ற மற்றும் பொறுப்பற்ற செயலாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது.
இன்று
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் படித்த நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதைச்
சாதித்து விட்டார்கள்? பணத்தைப் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்குப்
படித்திருந்தும் குணத்தைப் பற்றித் தெரியாமலே இருக்கிறார்கள்.
பணத்தைச்
சேர்ப்பதும் அதை முறையற்ற வழியில் பெருக்குவதும் ஆரம்பத்தில் சந்தோசமான விளையாட்டாக
இருந்தாலும் முடிவில் அதுவே துயரம் தரும் சுழலாக மாறி விடுகின்றது. இந்த விசயத்தில்
படிக்காதவர்களுக்கு அறியாமையால் செய்தமையால், பாவத்திலிருந்து விடுபட ஒரு சிறிது வாய்ப்பு
இருக்கலாம். ஆனால் படித்தவர்களுக்கு விடுபட வாய்ப்பே இல்லை.
ஆகவே,
படித்தவர்கள் பாவம் செய்தால் அவர்கள் அய்யோ என்றோ போவார்கள். அதைத் தடுக்க முடியாது.
இதைத்தானே பாரதியார் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். ரௌத்திரம் பழகியவர் அல்லவா
பாரதியார்! பாதகம் செய்வோரைக் கண்டால் அவரால் எப்படி பொறுக்க முடியும்? ஆகவே, பாரதியாரின்
கோபத்தில் நியாயம் மட்டுமில்லை, மாபெரும் உண்மையும் அடங்கியிருக்கிறது. இதை உணர்ந்து
படித்தவர்கள் பாவம் செய்யாமல் இருப்பதொன்றே உத்தமான வழியாகும்.
******
No comments:
Post a Comment