அவரவர் விருப்பம் அவரவர்க்கு முக்கியம்!
எனக்கும்
கொஞ்சம் விருப்பம் வேண்டும்
என்
விருப்பத்தை மதியுங்கள்
எனக்கு
விருப்பம் இல்லாததைச்
செய்யச்
சொல்லாதீர்கள்
எனக்கு
விருப்பம் இல்லாததை
முடிக்க
வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்
எனக்கு
விருப்பம் இல்லாததில்
என்னை
ஈடுபடச் சொல்லாதீர்கள்
எனக்கு
விருப்பம் இல்லாததை
எனது
கனவு என உளறாதீர்கள்
எனக்கு
விருப்பம் இல்லாததை
என்
தலையில் கட்டாதீர்கள்
எனக்கு
விருப்பம் இல்லாததிலிருந்து
எனக்கு
விடுதலை அளியுங்கள்
எனக்கு
விருப்பமானதை
நான்
செய்துகொள்கிறேன்
எனது
வெற்றி தோல்வி பற்றி
தயவு
செய்து நீங்கள் அக்கறை காட்டாதீர்கள்
என்
விருப்பத்தில் தோற்றாலும்
அது
எனக்கு வெற்றி
எனக்கு
விருப்பமில்லாததில் வென்றாலும்
அது
எனக்குத் தோல்வி
*****
No comments:
Post a Comment