19 Dec 2024

வை! ராஜா வை!

வை! ராஜா வை!

மறதி அதிகம் என்பதால்

முக்கியமானவற்றைக் குறித்து வை.

சுற்றுப்புறத்தை மட்டுமல்ல

மனதையும் சுத்தமாக வை.

அவசியமான வேலைகளைச் செய்

அநாவசிய வேலைகளை ஒதுக்கி வை.

தேவையானவற்றில் கவனம் கொள்

தேவையற்றதைத் தூர வை.

இயந்திரம் போல இயங்காதே

மாற்றி யோசிக்க வேண்டும் என்பதை மனதில் வை.

ஒரு நேரத்தில் ஒன்பது வேலைகளைச் செய்யாதே

ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் மனதை வை.

எந்நேரமும் வேலை என்று மட்டும் இருக்காதே

உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நேரம் ஒதுக்கி வை.

எதற்கெடுத்தாலும் பேசிக் கொண்டே இருக்காதே

செயலில் இறங்கி நிரூபிப்பதை வழக்கப்படுத்தி வை.

வேலையையும் பணத்தையும் மட்டும் நினைவில் வைக்காதே

நிம்மதியையும் மகிழ்வையும் நினைவில் வை.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...